திமிங்கலத்திடம் இருந்து தப்பிக்க படகில் ஏறிய நீர் நாய்..!
அமெரிக்காவில் கொலைகார திமிங்கலத்திடம் இருந்து தப்பிய கடல் நீர் நாய் படகில் ஒளிந்து கொண்டு உயிரை காப்பாற்றிக் கொண்டது. அலாஸ்கா பகுதியில் சிலர் படகில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது அதை கண்ட அவர்கள் அதனைப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் கடல் நாய் ஒன்றினை உணவுக்காக இந்த திமிங்கலம் துரத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது.
அதனிடம் இருந்து தப்பிக்க முயன்று அந்த கடல் நீர் நாய் வேகவேகமாக சுற்றுலா பயணிகள் இருந்த படகில் ஏறி ஒளிந்துகொண்டது. பின்னர் மனிதர்களை கண்டதும் கடலுக்குள் குதிக்கும் சென்றாலும் திமிங்கலத்திடம் இருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள சிறிது நேரம் படகிலேயே சுற்றி வந்து அந்த நாய் திமிங்கலம் சிறிது தூரம் சென்ற பிறகு மீண்டும் கடலுக்குள் சென்றது.






