பிரேசிலில் துள்ளி குதித்த திமிங்கலத்தின் வீடியோ வெளியீடு..!
பிரேசில் கடற்பகுதிக்கு இனப்பெருக்கத்திற்காக வந்துள்ள இரண்டு ஹபேங் இன திமிங்கலங்கள் கடலின் மேற்பரப்புக்கு வெளியே துள்ளி வரும் அழகிய காட்சி வெளியாகியுள்ளது. அட்லாண்டிக் கடலில் பகிலா கடற்பகுதியில் இனப்பெருக்கத்திற்காக அந்த இனத் திமிங்கலங்கள் ஆண்டுதோறும் அதிக எண்ணிக்கையில் வரும்.
அதுபோல ஏராளமான மீன்கள் வந்துள்ள நிலையில் அவை எழுப்பும் சப்தம் குறித்த ஆராய்ச்சியில் பிரேசில் ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். அந்த பணியில் ஈடுபட்டிருந்த போது இரண்டு திமிங்கலங்கள் மாறி மாறி கடலின் மேற்பரப்புக்கு துள்ளி வருவதும் பின் உள்ளே செல்வதுமாக இருந்த காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.






