--- --:--:-- --

ஆன்லைன் கிளாசுக்கு மொபைல் இல்லாததால் மாணவன் தற்கொலை..!

11

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆன்லைன் வகுப்பில் படிக்க செல்போன் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்.

 

இவரது 14 வயது மகன் விக்னேஷ். கொள்ளைக்காரன் குட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் அந்த பள்ளியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே ஆன்லைனில் படிப்பதற்கு வசதியாக செல்போன் வாங்கித் தருமாறு விக்னேஷ் தனது தந்தையுடன் கேட்டுள்ளார். அதற்கு விஜயகுமார் தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும் முந்திரிக் கொட்டைகளை விற்று பணம் வந்த பின் செல்போன் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

 

இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் தனது தாயாரின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கில் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில் தற்போது ஆன்லைன் கல்விக்கு செல்போன் வாங்க முடியாமல் மாணவன் உயிரிழந்திருப்பது கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon