முக்கிய நபர்கள் 2 பேர் கொரொனாவால் உயிரிழப்பு..! கடைசி நிமிச ஆடியோ..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் மற்றும் மருத்துவர் கொரொனாவால் உயிரிழந்தனர். 2012 முதல் 2016ம் ஆண்டு வரை இராஜபாளையம் நகர்மன்றத் தலைவராக இருந்த ஆவாரம் பட்டியை சேர்ந்த 45 வயதான தனலட்சுமிக்கு மூன்று தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல ராஜபாளையத்தை சேர்ந்த 67 வயதான சாந்திலால் என்ற மருத்துவர் 15 நாட்களுக்கு முன் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து 10 நாட்களாக தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
மூச்சுத் திணறல் அதிகமாக நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் மருத்துவர் உயிரிழப்புக்கு சுமார் மூன்று நாட்களுக்கு முன்னதாக அவர் பேசியதாக வீடியோ பரவி வருகிறது. அதில் விரைவில் தான் உயிரிழக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அரசு மருத்துவமனை முதல்வர் சங்கு மணியை தொடர்பு கொண்டபோது மருத்துவர் ஏற்கனவே 80% நுரையீரல் பாதிப்பு டன் மருத்துவமனைக்கு வந்ததாக கூறியுள்ளார். இதனால் அவருக்கு உச்சபட்ச சிகிச்சை அளித்த போதும் காப்பாற்ற முடியவில்லை என்றும் மன உளைச்சலில் அவர் ஆடியோ வெளியிட்டு இருக்கலாம் எனவும் தகவல் தெரிவித்தார்.






