--- --:--:-- --

கவச உடை தயாரிப்பில் உலகிலேயே இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா..!

2.1

உலகிலேயே கவச உடையை தயாரிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். கொரோனாவுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கும் விதமாக மும்பை கொல்கத்தா மற்றும் நொய்டாவில் அதிக திறன் கொண்ட கொரொனா பரிசோதனை ஆய்வகங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.

 

காணொளி மூலமாக இந்த ஆய்வகங்களை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் கொரொனாவை விரட்டியடிக்க மத்திய அரசு சரியான நேரத்தில் எடுத்த முடிவால் பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவாக இருப்பதாக கூறினார். நாளொன்றுக்கு 3 லட்சம் என்பது முக கவசங்களை நாடு உற்பத்தி செய்து வருவதாகவும் கவச உடை உற்பத்தியில் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon