--- --:--:-- --

10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவம் பார்த்த நபர் கைது..!

13

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்க்க வந்ததாக போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் ஆலத்தூர் என்ற பகுதியை சேர்ந்த 58 வயதான பாபு பலராமன் என்பவர் மீது எழுந்த புகார் குறித்து குடியாத்தம் மருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் ஆய்வு செய்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

 

கைது செய்யப்பட்ட பாபு பலராமனிடம் இருந்து ஆங்கில மருத்துவர்கள் பயன்படுத்தும் மருந்துகள், ஊசி மற்றும் மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பாபு பலராமனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon