--- --:--:-- --

அசாம் மற்றும் பீகாரில் பெய்து வரும் கனமழை..!

13

சாம் மாநிலத்தில் வெள்ள பாதிப்புகளை இறந்தோரின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. 25 லட்சம் பேர் இன்னும் வெள்ளப் பாதிப்புகளால் தத்தளித்து வருகின்றனர். பிஹார் மாநிலத்தில் சுமார் 14 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அசாமில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஏராளமான வேளாண் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் மிகுந்த கலக்கமடைந்துள்ளனர்.

 

அந்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக நகா மாவட்டத்தில் விடாமல் பெய்து வரும் கனமழையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் கால்நடைகளுடன் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்து வருகிறார்கள்.

 

இதே போல் பீகாரிலும் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளிக்கின்றன. அரசு அலுவலகத்தில் மழைநீர் புகுந்ததால் நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு சாம்பல் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் மீட்டு அழைத்து வரும்போது படகிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து தாயையும் சேயையும் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீட்பு படையினர் பத்திரமாக சேர்த்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon