--- --:--:-- --

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் மழை..!

6.3

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி, நீலகிரி மாவட்ட தேவாலா ஆகிய இடங்களில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

 

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் இரண்டு சென்டிமீட்டர் கூத்தாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்று குறிப்பிட்டிருக்கும் ஆய்வு மையம் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon