தந்தையுடன் நின்றிருந்த சிறுவன் எதிர்பாரத விதமாக மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு..!

சென்னை ராமாபுரத்தில் தந்தையுடன் எலக்ட்ரிசியன் வேலைக்கு சென்ற 15 வயது சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கொடுங்கையூர் அடுத்து எழில் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.

 

ராமபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக வேலைக்கு சென்ற அவர் தனது மகனையும் அழைத்து சென்றுள்ளான். இருவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கால்தவறி ஹரிஷங்கர் மாடியில் முதல் தளத்தில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

 

இதில் தளத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் ஹரிஷங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply