ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருக்கும் நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். இந்நிலையில் சக கைதிகள் மற்றும் சிறைக் காவலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக துணியால் கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நளினியின் வழக்கறிஞருடன் கேட்டதற்கு நளினியின் தற்கொலை முயற்சியை சிறைக்காவலர்கள் தடுத்ததாகவும், அவர் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார்.