கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையான ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் மக்கள் நலன் கருதி இன்று முதல் மூடல் – covid-19 தாக்கம் முடிந்த பின்னர் திறக்கப்படும் கடை உரிமையாளர் சிவ கணேஷ் அறிவிப்பு.கோவை கிராஸ் கட் சாலையில் ஏராளமான ஜவுளி நிறுவனங்களும், வணிக வளாகங்களும் உள்ளது. இதில் கோவை மக்களின் பிரதான துணி கடையாக ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் உள்ளது.
இந்த நிலையில் அதன் உரிமையாளர் சிவ கணேஷ் தற்போது covid-19 சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மக்களின் உடல் ஆரோக்கியத்தை காக்கும் பொருட்டு இன்று முதல் வைரஸ் தாக்கம் குறையும் வரை கடையை தற்காலிகமாக மூடி உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் தற்போது இந்த covid-19 வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.மேலும், அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.எனவே, அரசாங்கத்திற்கும் covid-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் அனைத்து தரப்பினருக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் எங்களுடைய ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தை இந்த வைரஸ் தாக்கம் குறையும் வரை தற்காலிகமாக மூடுவதாகவும், எங்களுடைய முக்கிய நோக்கம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் உடல்நலம் பொதுமக்களின் உடல்நலம் ஆகும்.
இந்த தாக்கம் எப்போது குறைகிறதோ அதுவரை தங்களுடைய கடையை தற்காலிகமாக மூடி உள்ளதாகவும்,இது தனது தன்னிச்சையான முடிவு எங்களுடைய சங்கத்திற்கும்,இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை எங்களுடைய நிறுவனத்தில் 600 ஆட்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் கடந்த ஊரடங்கு காலத்தின்போது வழங்கியது போல் ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கடந்த 2 மாதத்திற்கு முன்னர் முதல்வரின் covid-19 தடுப்பு நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.