கோவில்களில் திருவிழா நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்..!

கோவில் திருவிழாக்கள் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கவழக்கங்கள் படி திருக்கோவில் வளாகத்தில் நடைபெற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருக்கிறது.

 

கோவில்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பழக்க வழக்கங்களின் படி நடைபெறும் திருவிழாக்களுக்கு தலைமை இடத்தில் அனுமதி பெற வேண்டியதில்லை என தெரிவித்துள்ளது.

 

திருவிழாக்கள் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்களின் படி மாறுதல் இல்லாமல் கோவில் வளாகத்தில் நடைபெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்களில் கோவில் பணியாளர்களை கொண்டும், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கோவில் விழாக்களில் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. திருவிழாக்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற இருப்பின் அனுமதி பெற்று திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . திருவிழாக்களை பக்தர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து காணும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply