புதுச்சேரியில் இன்று பட்ஜெட் தாக்கல்..?

புதுச்சேரியில் திட்டமிட்டபடி இன்று பட்ஜெட் தாக்கல் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. புதுச்சேரியில் 2020 – 2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்ய இருப்பதாக மாநில சட்டப்பேரவை செயலகம் பதிவிட்டது. இந்நிலையில் துணைநிலை ஆளுனர் உரைக்கு கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

 

இதனிடைய அம்மாநில முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ,சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமி எழுதிய கடிதத்தில் துணைநிலை ஆளுநர் உரை தமக்கு தாமதமாக கிடைக்க பட்டது என்றும் அதற்கான ஒப்புதல் தன்னிடம் பெறவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

 

யூனியன் பிரதேச சட்டப் படி,பட்ஜெட்டிற்கான ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் வேறு ஒரு தினத்தில் தாக்கல் செய்யுமாறும் அதில் குறிப்பிடப்பட்டது. இந்த கடிதத்தை முதலமைச்சர் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு அனுப்பியும் யாரும் பெற்றுக்கொள்ளவில்லை என கூறியுள்ள கிரண்பேடி இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே திட்டமிட்டபடி முதலமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.


Leave a Reply