சுஷாந்த் சிங் மரணத்தில் உள்ள பின்னணியை நிரூபிப்பேன் என கங்கனா சவால்..!

சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை தன்னால் நிரூபிக்க முடியவில்லை என்றால் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்து விடுவதாக நடிகை கங்கனா ரனாவத் சவால் விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக தனக்கு மும்பை போலீசிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும் ஆனால் தான் மணாலியில் இருப்பதாகவும் தனது விவரங்களை பதிவு செய்ய ஆள் அனுப்புமாறு கூறியும் அதற்குப்பின் தகவல் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

மேலும் இந்த விவகாரம் குறித்து நிரூபிக்க முடியாத ஆதாரமற்ற குற்றச்சாட்டை தான் முன்வைத்திருந்தால் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க தயார் என்றும் அவர் கூறினார். முன்னதாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டபோது அதனை திரைப்பட மாஃபியாக்களால் அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட படுகொலை என குறிப்பிட்டிருந்தார்.

 

மேலும் பாலிவுட் திரையுலகம் மற்றும் மீடியாக்களிடம் இருந்து சுஷாந்த் சிங் எதிர்கொண்ட அழுத்தங்களையும் தவிர்ப்புகளையும் கடுமையாக சாடியிருந்தார்.


Leave a Reply