திரையில் மீண்டும் ஜோடியாக மின்னப்போகும் நடிகர் சூர்யா – ஜோதிகா

திரையில் ஜோடியாக வலம் வந்த நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் காதலித்து நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தவர்கள். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் ஷூட்டிங்கில் தான் அவர்கள் முதன்முதலாக சந்திப்பு ஆரம்பமானது. திருமணத்திற்கு முன்பு ஆறு படங்களில் ஜோடியாக அவர்கள் நடித்துள்ளனர்.

 

அந்த படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா அதற்குப் பிறகு 2015 ஆம் ஆண்டில் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக ஜோதிகா பொன்மகள்வந்தாள் படம்தான் இந்த வருடம் வெளிவந்தது.

 

அந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓ‌டி‌டி தளத்தில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் ஜோதிகா நடிக்கும் படங்கள் அனைத்தையும் சூர்யா தயாரித்து வெளியிட்டு வருகிறார். எனவே இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஹலிதா ஷமீம் தான் இவர்கள் இருவரையும் ஜோடியாக நடிக்க வைக்க ஒரு கதையை கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

 

எனவே சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்கும் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.


Leave a Reply