லடாக் சென்று ஆய்வு நடத்தும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

லடாக்கில் அண்மையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்திய – சீன ராணுவ அதிகாரிகள் தரப்பில் நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. செவ்வாய் அன்று நடைபெற்ற 14 மணி நேர பேச்சு வார்த்தையின் போது படைகளை முழுவதுமாக விலக்கிக் கொள்ளுமாறு இந்திய ராணுவ அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

கல்வான் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள சீனா ஒப்புக் கொண்ட போதும் பிங்கர் மலைத்தொடரின் சில பகுதிகளில் படைகளை விலக்கிக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் அமைதிப் பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அறியவும் களத்தில் நிற்க்கும் வீரர்களை சந்தித்து உரையாடவும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளார்.

 

ராணுவ தளபதி உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளும் ராஜ்நாத்சிங்குடன் செல்கின்றனர். பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய சில பகுதிகளுக்கும் ராஜ்நாத்சிங் செல்ல திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனிடைய கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இருந்து முழுவதுமாக படைகளை விளக்குவதற்கு இந்தியா மற்றும் சீன ராணுவ தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவின் வலியுறுத்தலை அடுத்து கல்வான் பள்ளத்தாக்கு, கோகுரா மற்றும் ஹார்ட்ஸ் பிரிங்க் ஆகிய இடங்களில் சீனப் படைகள் பின்வாங்கி விட்டன.

 

பிங்கர்ப்பூர் எந்த இடத்திலும் கணிசமான படைகள் குறைக்கப்பட்டன. பேச்சுவார்த்தையில் கூறப்பட்டபடி சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து சீனா படைகளை விலக்கிக் கொண்டதா என்பதை எடுத்து 10 நாட்களுக்கு ஆய்வு செய்ய இந்திய ராணுவ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்று காலை லடாக் புறப்பட்டு சென்ற ராஜ்நாத் சிங் இது குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply