--- --:--:-- --

திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள கருங்குளம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

0.2

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவிலுள்ள கருங்குளம் ஊராட்சியில் சேது பாஸ்கரா கல்வி குழும சேர்மன் சேது குமணன் ஏற்பாட்டில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட வேம்பு ,அத்தி , பாதாம், மகாகனி ,மற்றும் பலதரப்பட்ட பழ வகை கன்றுகள் நடப்பட்டன.

 

மேலும் நிகழ்ச்சியில் தனி வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா ,ஊராட்சி மன்ற தலைவர் நாச்சியப்பன், துணைத் தலைவர் போஸ், நகரத்தார்கள் மெய்யப்பன் ,செல்லையா, கருப்பையா ,பட்டமங்கலம் குருக்கள் தண்டாயுதபாணி ,மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி நாச்சியப்பன், வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .

சிவகங்கை மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதை வருங்கால சந்ததியினருக்கு ஆற்றும் சிறந்த சமுதாய தொண்டாக சேது பாஸ்கரா கல்வி குழுமம் ஆற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon