--- --:--:-- --

டிக்-டாக் பிரபலம் சியா காகர் தற்கொலை..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

5

16 வயதில் பல லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட டிக்டாக் பிரபலம் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அழகும், நளினமும் நடனத்தில் விருப்பமும் கொண்ட இந்த இளம்பெண் இப்போது இல்லை. டெல்லியை சேர்ந்த சியா காகர் என்ற இவருக்கு டிக்டாக்கில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்கள் இருக்கிறார்கள்.

 

இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். சியாவின் நடன வீடியோக்களும், புகைப்படங்களும் அந்த அளவுக்கு ரசிகர்களின் அதிக லைக்குகளால் திணறி விடும். ஆறு நாட்களுக்கு முன்பு பஞ்சாபி பாடலுக்கு சியா ஆடிய நடனத்திற்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் லைக்குகள் குவிந்தன. ஆனால் அதுதான் சியாவின் கடைசி நடனம் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

 

அனைவரையும் தனது தற்கொலையின் மூலம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் சியா. சியாவின் திடீர் முடிவு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள அவரது மேலாளர் அர்ஜுன் முந்தைய நாள் இரவில் புதிய பிராஜக்ட் குறித்து பேசிய போது சியா மிகவும் உற்சாகமாக இருந்ததாக கூறுகிறார். சியாவின் தற்கொலைக்கான காரணம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

இதே நேரத்தில் சியாவின் மரணத்தை ஏற்க முடியாமல் அதிர்ச்சி அடைந்துள்ள நெட்டிசன்கள் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். சில வினாடிகளில் எடுக்கப்படும் தற்கொலை முடிவுகள் எதற்கும் தீர்வை தராது என்பதை அனைவருமே உணர்ந்து பிரச்சினைகளை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon