--- --:--:-- --

உயிரிழந்த ஜெயாராஜ் மற்றும் பென்னி குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம்!

6

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பொது முடக்க விதிகளை மீறி செல்போன் கடை திறந்து இருந்ததாகவும் கடை அருகே இருந்த கூட்டத்தினரை தலைமை காவலர் கலைந்து போக சொன்னதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடை உரிமையாளர் ஜெயராஜும், அவரது மகன் பென்னிக்ஸ்சும் தரையில் அமர்ந்து கொண்டு போக முடியாது எனக் கூறி தகாத வார்த்தைகளால் காவலர்களை திட்டியுள்ளார். இதனால் வழக்கு பதியப்பட்டு காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

 

தந்தை, மகன் மரணம் அடைந்த சம்பவத்தில் 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னி ஆகியோரின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

 

இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதித்துறை நடுவர் அவர்களின் அறிக்கையின் பெயரிலும் சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும் இந்த சம்பவத்தில் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

ஜெயராஜ் மற்றும் பென்னி குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படுவதாகவும் மேலும் அந்த குடும்பத்தின் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon