கண்ணாடி கதவு இருப்பது தெரியாமல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு விழுந்த பெண்….கண்ணாடி வயிற்றில் குத்தி உயிரிழப்பு!
வங்கியில் உள்ள கண்ணாடிக் கதவில் மோதியதில் வயிற்றில் வெட்டுக்காயம் ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்துள்ளது. பெரும்பாவுர் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்ற பீனாஜி ஜூபால் என்பவர்தனது வாகனத்திலிருந்து சாவியை எடுக்க மறந்து விட்ட நிலையில் அதை எடுக்க வேகமாக வெளியே சென்றார்.
அப்போது வங்கியின் கண்ணாடி கதவு மூடப்பட்டு இருப்பது தெரியாமல் அதன் மீது மோதி விழுந்ததில் கண்ணாடி நொறுங்கியது. உடைந்த கண்ணாடித் துண்டு அப்பெண்ணின் வயிற்றில் குத்தியது. அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து வங்கியில் இருந்தவர்கள் காவலர்களின் உதவியுடன் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்ட காரணத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.






