--- --:--:-- --

சர்வதேச அளவில் தீவிரமடையும் கொரோனா தொற்று…!

5

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பரவல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் தெரிவித்துள்ளார்.

 

ஞாயிறு அன்று கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கணக்கிடும்போது சர்வதேச அளவில் கொரொனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் 75 விழுக்காடு நபர்கள் அமெரிக்கா மற்றும் தெற்காசிய பகுதிகளில் உள்ள10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

ஐரோப்பிய நாடுகளில் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் உலகின் பிற நாடுகளில் தொற்று பரவல் தேகம் தீவிரம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்களில் 9 நாட்கள் உலகம் முழுவதும் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஞாயிறன்று அதிகபட்சமாக ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது தொற்றுகளின் தீவிரத்தையும் உணர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

ஆப்பிரிக்க கண்டத்தில் தொற்று பரவல்அதிகரித்து வருவதாகவும் டெட்ராஸ் கூறியுள்ளார். உலகளவில் பல நாடுகளில் கொரொனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது ஆறுதலை அளித்தாலும் அத்தகைய நாடுகள் எச்சரிக்கை நடவடிக்கைகளை கைவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon