--- --:--:-- --

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை!

6

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் கடந்த ஐந்தாம் தேதி வரை தமிழகத்தில் இருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இருக்கும் 316 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மொத்தமாக 316 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே உள்ளன என்றும் அவற்றில் சென்னையில் தான் அதிகபட்சமாக 201 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

தேனி, மதுரை, கரூர், சிவகங்கை, விருதுநகர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உட்பட 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon