--- --:--:-- --

கீழடியில் தோண்டத்தோண்ட எலும்புக்கூடு. 2,200 ஆண்டுகளுக்கு முன்பு சுடுகாட்டுப் பகுதியாக இருந்ததா?

5.1

தொல்லியல் துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த ஆய்வில் பூமிக்கு அடியில் பல்வேறு வகையான மண் பாண்ட பொருட்கள், சுவர்கள், சுடு மண் செங்கல் கற்கள், போன்ற பொருள்கள் கிடைத்தன. இவைகள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

தற்போது6ம் கட்ட அகழாய்வு நடைபெறுகிறது. இதில் சில எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
இந்த எலும்புக்கூடு மனித இனத்தை சார்ந்ததா? அல்லது விலங்கினத்தை சார்ந்ததா? என்று உடனடியாக தெரியவில்லை.ஆய்வுக்கு பிறகே தெரிய வரும் என்று தெரிகிறது.முன்னொரு காலத்தில் இப்பகுதி சுடுகாட்டு பகுதியாக இருந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.

 

கீழடியில் தற்போது கண்டெடுக்கப்பட்ட விலங்கு, எலும்புகூடுகள் வித்தியாச வடிவில் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகள். சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ஆறாம்கட்ட அகழாய்வு தொடங்கி பணிகள் நடைபெற்றுவந்த நிலையில்,கொரோனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களுக்கு பின்பாக கடந்த மே-19ஆம் தேதி அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கியது.

அகழாய்வின் போது பானை ஓடுகள், உறைகிணறு, அடுப்பு போன்ற தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் ,நேற்றைய தினம் கீழடியில் விலங்கின் எலும்பு ஒன்று கண்டறியப்பட்டது. முழு உருவத்தோடு உள்ள அந்த எலும்பு எந்தவகையான விலங்கு என்பது தொடர்பாக தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு நடத்திவருகின்றனர்.

 

கடந்த 3ஆம் கட்ட அகழாய்வில் திமிலுடன் கூடிய காளைமாட்டின் எலும்புகூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ,வைகை நதி நகர நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் வேளாண் தொழிலை பிரதானமாக செய்துவந்துள்ளதற்கு ஆதரமாக அமைந்துள்ளது.இதனிடையே 2,200ஆண்டுகளுக்கு முந்தைய இடுகாட்டு பகுதியாக கருதக்கூடிய கொந்தகை பகுதியில் நடைபெறும் அகழாய்வில்,மனித எலும்புகூடுகளும், வடிவத்தில் வித்தியாசமான முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon