--- --:--:-- --

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு..!

1

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணிகள் நடைபெற்றன.இந்த பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட உள்ளார்.

 

மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் இதர விவரங்களை சரிபார்த்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை அடுத்த மாதம் 11-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.

 

 

இந்த காலகட்டத்தில், தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் பெயர், முகவரி மற்றும் இதர விவரங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் உரிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீது அடுத்த மாதம் 28-ஆம் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும். அதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon