புதுக்கோட்டை சிறுமி நரபலி வழக்கில் பெண் மந்திரவாதி உட்பட இருவர் கைது !
புதுக்கோட்டை அருகே சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண் மந்திரவாதி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி வித்தியா கடந்த மாதம்18ஆம் தேதி தைல மரக் காட்டில் கொலை செய்யப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
ஆனால் பெற்ற மகளை நரபலி கொடுத்தால் அதிகம் பணம் கிடைக்கும் என பெண் மந்திரவாதி கூறியதை கேட்டு சிறுமியின் தந்தை பன்னீரே அவரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பன்னீர் மற்றும் அவரது உறவினர் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தநிலையில் நர பலிக்கு காரணமான பெண் மந்திரவாதி வசந்தி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த பன்னீரின் உறவினர் முருகாயி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.






