--- --:--:-- --

தமிழ்நாட்டில் இன்று இந்த 9 மாவட்டங்களில் மழை வெளுக்கும்..!

4

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

 

 

இதன் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட கடலோர தமிழகத்தில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது.

 

 

சென்னையை பொறுத்தவரையில், நகரின் ஒருசில பகுதிகளில் மிக லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனிடையே, வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும், நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் இன்று இரவுக்குள் கரை திரும்ப தமிழ்நாடு மீனவர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon