தங்கம் விலை மீண்டும் சரிவு..!
நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் ரூ.13,015க்கும் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை மீண்டும் தடாலடியாக சரிந்துள்ளதால் நகை பிரியர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.12,815க்கும், சவரனுக்கு ரூ.1600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.10,490க்கும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.83,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.200க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




