சென்னை வாக்காளர்கள் அதிகரிப்பு
சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, எஸ்.ஐ.ஆர்-க்குப் பின் சுமார் 84,000 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டு, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 29,14,908 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 14,04,968 பேரும், பெண் வாக்காளர்கள் 15,09,040 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 900 பேரும் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் இருப்பதாகத் தேர்தல் அதிகாரி சமீரன் தெரிவித்துள்ளார்.
இதில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக பெரம்பூர் (2,28,139 வாக்காளர்கள்) முதலிடத்திலும், குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக துறைமுகம் (1,20,852 வாக்காளர்கள்) இடம்பிடித்துள்ளன. மேலும், வாக்குச்சாவடி மறுசீரமைப்பிற்கு முன் 4079 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை, தற்போது 4071 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




