சதித் திட்டங்களில் மாட்டி கொள்ளாதீர்கள் : த.வெ.க எம்.எல்.ஏ-க்களுக்கு விஜய் அறிவுரை
தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், எந்தவொரு சூழ்ச்சியிலும் மாட்டிக் கொள்ளாமல் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் மட்டுமே எம்.எல்.ஏ-க்கள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டணியில் உள்ளவர்களைத் தவிர மற்ற அனைவரும் எதிர்க்கட்சிகளே என்றும், த.வெ.க அரசுக்குக் கிடைக்கும் மக்கள் வரவேற்பைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவதூறுகளைப் பரப்பி அரசு நிர்வாகத்தை முடக்கப் பார்க்கிறார்கள் என்றும் அவர் சாடினார். மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தவறு செய்தால் யாராக இருந்தாலும் தயவுதாட்சணியமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




