--- --:--:-- --

விலங்குகளை கொடுமைப்படுத்தி எடுக்கப்படும் டிக் டாக் வீடியோக்கள்!

4

மனிதர்களால் காட்டு விலங்குகள் மட்டுமின்றி வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற உயிரினங்களும் பாதிக்கப்படுவதோடு விலங்குகளை கொடுமைப்படுத்தி ரசிக்கும் கொடூர மனம் கொண்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சக மனிதர்களையே கொல்லும் சில பேர் விலங்குகளை மட்டும் விட்டு விடவா போகிறார்கள்.

 

அப்படி ஒருவர்தான் நெல்லை மாவட்டத்தில் தான் வளர்த்த பூனையை தூக்கிட்டு அதை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பதிவிட்டார். அதேபோல் நாய்களை வைத்து முயல்களை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

வீடியோவாக வந்தவை குறைவாக இருந்தாலும் விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகள் ஏராளம். பொது முடக்க காலத்தில் உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்த விலங்குகளை தேடி சென்று உதவி அவர்களுக்கு மத்தியில் இது போன்ற சிலரால் மானு டம் கேள்விக்குறியாகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon