--- --:--:-- --

கருணாநிதியின் 97வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய திமுக!

3

12/02/2016 - CHENNAI: DMK chief M Karunanidhi and his son M K Stalin after completion of his Namakku Naame campaign - Express Photo. [Tamil Nadu, DMK, M Karunanidhi, Son, M K Stalin]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் இன்று எளிமையாக கொண்டாடப்பட்டுள்ளது. திமுக தலைவரும், கருணாநிதியின் மகளுமான மு க ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி ஆர் பாலு கருணாநிதியின் மகளும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி திமுக இளைஞர் அணி செயலாளரும் கருணாநிதியின் பேரனுமான உதயநிதி ஆகியோரும் மரியாதை செலுத்தினர். அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர்.

 

மரியாதை செலுத்தியதை தொடர்ந்து கருணாநிதியை நினைவிடத்தில் திருமணம் ஒன்றையும் மு க ஸ்டாலின் நடத்திவைத்தார். முன்னதாக கவிஞர் வைரமுத்துவும், கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். கலைஞர் என்ற வார்த்தையை சொல்லும் போது கிடைக்கும் எரிசக்திக்கு இணையானது எதுவும் கிடையாது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்த நாளையொட்டி தமிழ் தாயின் ஆண் வடிவமே மூத்த தமிழ் இனத்தின் முழு உருவமே எங்கள் உயிரின் உயிரே என்ற தலைப்பில் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 

அதில் அரசியல், இலக்கியம், திரை உலகம் என அத்தனை துறைகளிலும் முத்திரை பதித்துள்ள கலைஞர் இந்த நூற்றாண்டின் சரித்திர தலைவர் என புகழாரம் சூட்டியுள்ளார். பெரியார், அண்ணா, காமராஜர் போன்றோர் கலைஞரைப் புகழ்ந்துள்ளதையும் ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon