ராயபுரத்தில் 3 ஆயிரத்தை கடந்துள்ள கொரோனா பாதிப்பு !
சென்னை இராயபுரம் மண்டலத்தில் கொரொனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னை முழுவதும் கொரோனா பாதிப்பு 16,585 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 506 உள்ளது. சென்னையில் கொரொனாவுக்கு 135 பேர் உயிரிழந்துள்ளனர். 7,805 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 3,060 ஆக உள்ளது.
தண்டையார்பேட்டையிலும் தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 2,007 ஆக உள்ளது. கோடம்பாக்கம் மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களின் பாதிப்பு 2000 ஐ நெருங்குகிறது. கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 921 பேருக்கும், தேனாம்பேட்டையில் 1,871 பேருக்கும்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருவிக நகர் மண்டலத்தில் 1,711 பேருக்கும் அண்ணாநகர் மண்டலத்தை 1,411 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அடையாறு, வளசரவாக்கத்தில் பாதிப்பு ஆயிரத்தை நெருங்குகிறது. அடையாறு மண்டலத்தில் 949 பேரும் வளசரவாக்கத்தில் 910 பேரும் கொரொனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.






