தீயணைப்புத்துறைக்கு கிருமி நாசினி தெளிக்க 25 இருசக்கரவாகனங்களை வழங்கிய முதல்வர்!
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்க தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 25 இருசக்கர வாகனங்களை வழங்கி அவற்றின் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.
கொரொனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை மாநகரில் குறுகிய சாலைகளில் பெரிய வாகனங்கள் செல்ல இயலாத நிலையில் சாலைகளில் கிருமிநாசினி குறைக்க மாநில பேரிடர் மீட்பு நிதியில் இருந்து சுமார் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 இருசக்கர வாகனங்கள் வாங்கப்பட்டன. இந்த வாகனங்களில் காற்றழுத்த கிருமிநாசினி தெளிப்பான் பொருத்தப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கும் இந்த வாகனங்களை வழங்கி சேவைகளை துவக்கி வைக்கும் விதமாக 9 இருசக்கர வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கட்டுப்பாடு பகுதிகளில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.






