மதுரை சமயநல்லூரில் புதுமணத் தம்பதிகள் , தங்கள் திருமண செலவை அன்னவாசல் திட்டத்திற்கு வழங்கியதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் பிரியாணி உண்டு மகிழ்ந்தனர்.
கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழைமக்களுக்கு உணவளிக்கும் விதமாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் கடந்த மே – 1 ஆம் தேதி “மாமதுரை அன்னவாசல்” என்ற திட்டத்தை துவக்கினார். இந்தத் திட்டத்தின் மூலம் ஆதரவற்றோருக்கு தேவையான உணவு தன்னார்வலர்கள் மூலம் அவர்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு சென்று விநியோகிக்கப்பட்டது.
புதுமணத் தம்பதியின் இந்தச் செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.