மாவட்ட வாரியாக ஊழல்களை பட்டியலிட குழு அமைக்கப்படும்!

அதிமுக அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிட வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் திமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுகவின் மாவட்ட செயலாளர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

 

அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலான ஆலோசனை நடத்தினார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவினர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்யும் படலத்தை அதிமுக அரசு தொடங்கி இருப்பதாக கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

 

இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ திமுக என்றும் அஞ்சாது எனவும் கட்சிக்காக உழைத்திடும் ஒவ்வொருத்தரையும் காத்திடும் பொருட்டு மாவட்ட வாரியாக குழு அமைக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 

அதிமுக அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிட ஒவ்வொரு மாவட்டத்திற்கும், வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும் என்றும் திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Leave a Reply