--- --:--:-- --

புலம்பெயர் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோருக்கு வாழ்வளித்த கோவை !!!

1

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 4 வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது.ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் உண்ண உணவின்றி தவித்து வந்தனர்.

 

மத்திய,மாநில அரசுகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.மேலும் ,ஊரடங்கினால் தொழிற்சாலைகளும்,வர்த்தக நிறுவனங்களும் இயங்கவில்லை.இதனால் அங்கு பணியில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் வேலை இழந்து தவித்தனர்.வேலை செய்த நிறுவனங்களும் புலமபெயர் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் இல்லை.

 

இதனால் மகாராஷ்டிரா,பீகார்,உத்தரபிரதேசம்,மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உண்ண உணவு கூட கிடைக்காத நிலையில் தவித்து வந்தனர்.ரயில்கள் உட்பட போக்குவரத்து வசதிகளும் ஊரடங்கினால் நிறுத்தப்பட்டதால் சொந்த ஊர்களுக்கும் செல்ல வழியில்லை.தமிழக அரசு அவர்களுக்கு உணவு உட்பட பல்வேறு வசதிகளை செய்து கொண்டு வருகிறது.

 

இந்த நிலையில் 3 ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின் போது சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.அதில் முக்கியமாக மகாராஷ்டிரா,பீகார்,உத்தரபிரதேசம்,மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் விருப்பப்பட்டால் அவர்களது சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவர் என மத்திய அரசு அறிவித்தது.

அதனடிப்படையில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒவ்வொரு தாலுக்காவிலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறையினரால் சேகரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் வருவாய்த்துறையினரால் சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் கோவையில் இருந்து நேற்று வரை 17 சிறப்பு ரயில்கள் மூலம் 22 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,இன்றும் 3 சிறப்பு ரயில்களின் மூலம் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கோவையில் மேட்டுப்பாளையம், அன்னூர்,சூலூர் உள்ளிட்ட பல்வேறு தாலுக்காக்களில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்களில் நேற்று வரை மட்டுமே 22 ஆயிரம் பேர்,இன்று சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.புலம்பெயர் தொழிலாளர்கள் இத்தனை பேருக்கு வசிப்பிடமாகவும், வாழ்வளித்து வரும் கோவையில் நாம் இருப்பதும் நமக்கு பெருமையே !!!

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon