வெளிமாநிலங்களில் இருந்து மதுரை வந்த 4 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தவித்து வந்த மதுரையை சேர்ந்தவர்கள் அழைத்துவரப்பட்டு தனியார் கல்லூரிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் டெல்லியில் இருந்து வந்த பெண் உட்பட 4 பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .அதன் காரணமாக 4 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.