பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்களை அழிக்கத் தயார்!
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத முகாம்களை எந்த நேரத்திலும் அளிக்க தயாராக இந்திய விமானப்படை இருக்கிறது என அதன் தளபதி ஆர்கேஎஸ் பதோரியா தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்த அவர் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக வெளிவரும் தகவல்கள் பற்றி மக்கள் கவலை கொள்ள வேண்டாம் எனவும் அதை இந்திய விமானப்படை சாதுரியமாக கையாளும் என்றும் உறுதியளித்தார்.
ஹந்த்வாரா தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ் தானின் விமானப்படை அதிக எண்ணிக்கையில் ரோந்து பணிகளை நடத்துவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் இந்திய மண்ணில் தீவிரவாத சம்பவங்களை நிகழ்த்திய பிறகு பாகிஸ்தான் இப்படிப் பதற்றப்படுவது வழக்கமான ஒன்றுதான் என கூறியுள்ளார்.






