--- --:--:-- --

போலி மருத்துவர் திருத்தணிகாசலத்தின் மருந்துப் பொருட்கள் பறிமுதல்!

4.1

திருத்தணிகாசலத்தின் மருந்து பொருட்களை பறிமுதல் செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர். கொரொனா பாதிப்பை குணப்படுத்த தன்னிடம் மருந்து இருப்பதாக சமூகவலைதளத்தில் கூறிய திருத்தணி காலத்தின் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இணை இயக்குனர் சென்னை காவல் துறையில் புகார் அளித்தார்.

 

அதனடிப்படையில் திருத்தணிகாசலத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை நான்கு நாட்கள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரித்தனர். இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள அவரது மருத்துவமனையில் இருந்து மருந்துப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

 

இந்த மருந்துகள் எந்த முறையில் தயாரிக்கப்பட்டன? இது கொரொனா பாதிப்பை குணப்படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர். இந்த மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என தெரியவந்தால் திருத்தணிகாசலம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon