ஃபாஸ்டேக் வேலைசெய்யாவிட்டால் சுங்கச்சாவடியில் இருமடங்கு கட்டணம்!
செல்லாது அல்லது செயல்படாத ஃபாஸ்டேக் உடன் வரும் வாகனங்களுக்கு இருமடங்கு சுங்க கட்டணம் பெறப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்காக அனைத்து வாகனங்களும் ஃபாஸ்டேக் பொருத்துக் கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் ஃபாஸ்டேக் பொருத்தாத வாகனங்கள் அந்த லைனில் வந்தால் அவற்றுக்கு இரு மடங்கு கட்டணம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின் கடந்த 15ம் தேதி ஒரு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செல்லாத, அல்லது செயல்படாத ஃபாஸ்டேக் உடன் வாகனங்கள் ஃபாஸ்டேக் லைனில் வந்தால் அவற்றுக்கு இரு மடங்கு கட்டணம் பெற வகை செய்யப்பட்டுள்ளது.






