--- --:--:-- --

11,600 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வரும் பச்சை வால் நட்சத்திரம்!

5

சூரிய மண்டலத்தில் நுழைந்து உள்ள பச்சை வால் நட்சத்திரத்தை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 11,600 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரிய மண்டலத்தில் நுழையும் பச்சை நிற வால் நட்சத்திரமான சுவான் தற்போது பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது.

 

இதன் வால் சுமார் ஒரு கோடியே 77 லட்சம் கிலோமீட்டர் நீளம் கொண்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பணி மற்றும் தூசுகளால் ஆன இந்த வால்நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் தெற்கிலிருந்து வடக்காக செல்வதாக வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 

சூரியனை நோக்கி வழியில் வெப்பம் அடையும்போது அது சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது என்று கூறிய ஆய்வாளர்கள் இந்த வால் நட்சத்திரத்தை 5 முதல் 6 நாட்கள் வரை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon