புதுக்கோட்டையின் தந்தையின் சுமையை குறைப்பதற்காக தள்ளுவண்டி தள்ளி உதவி செய்து வருகிறார் 11 வயது சிறுமி. தபுதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த மணி கடந்த 5 ஆண்டுகளாக தள்ளுவண்டி தள்ளியே தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
கொரொனா ஊரடங்கால் வேலை இழந்து வறுமையில் வாடியதன் காரணமாக அவர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்துச்செல்லும் தந்தைக்கு உறுதுணையாக இருக்கிறார் அவரின் மகள். பள்ளி விடுமுறை என்பதால் தந்தையின் சுமையை குறைக்க எண்ணி அவருடன் வண்டியை தள்ளுவதாக சிறுமி சிவபாரதி மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
நாள்தோறும் நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து தனது மகள் உதவி செய்வதாக மணி கூறுகிறார். வாழ்வாதாரத்தை தேடி ஓடும் தந்தையின் சுமையை குறைக்க வீதியில் இறங்கியிருக்கும் மகளின் பாசம் பலரையும் நெகிழச் செய்துள்ளது.