காயம் அடைந்த சிறுவனையும் தூக்கிக்கொண்டு நடைபயணம்!
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் காயம் அடைந்த சிறுவனையும் தூக்கிக்கொண்டு 800 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற சம்பவம் வட இந்தியாவில் நடைபெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து புறப்பட்ட சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட 17 பேர் 1,300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மத்திய பிரதேச மாநிலம் சிம்ரோலிக்கும் துணிந்து புறப்பட்டனர்.
அவர்கள் சுமந்து சென்ற சிறுவனுக்கு கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்த குடும்பத்தினர் காயத்திற்கான காரணம் குறித்துக் கூறவில்லை. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் டிர க்ஏற்பாடு செய்து அவர்களை மத்திய பிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர்ர.






