டெல்லியில் ஒரு மாதத்தில் 4ஆவது முறையாக நிலநடுக்கம்!

தலைநகர் டெல்லியில் சுமார் ஒரு வாரத்தில் இன்று நான்காவது முறையாக நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ஏப்ரல் 12ம் தேதி டெல்லியில் 3.5 ரிக்டர் அளவுகோலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

இதையடுத்து வந்த நாட்களில் மேலும் இரண்டு முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் குறைவாகவே பதிவானதால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் டெல்லியில் பிதம்புரா பகுதியை மையமாகக் கொண்டு இன்று நான்காவது முறையாக மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 2.2 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

 

இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.


Leave a Reply