--- --:--:-- --

அமேசான் பிரைமில் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் நேரடி ரிலீஸ்!

7.1

ஓ‌டி‌டி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் நேரடியாக வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோரொனா பரவாமலிருக்க திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய இயலாத சூழல் நிலவுகிறது.

 

இந்த சூழ்நிலையில் அமேசான் பிரைம் வீடியோவில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள தமிழ் படமான பொன்மகள்வந்தாள் படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள பெண்குயின் ஜூன் 19ம் தேதியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் தயாரித்த படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசானில் வெளியாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon