போதைக்காக “தின்னர்” திரவத்தை குடித்த இருவர்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போதைக்காக பெயிண்ட் உடன் பயன்படுத்தப்படும் தின்னர் திரவத்தை குடித்ததாக கூறப்படும் இருவர் உயிரிழந்தனர். ஆட்சி பட்டியில் இயங்கி வரும் யூனிகாஸ்ட் அல்லாய்ஸ் என்ற இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அந்த கிராமங்களை சேர்ந்த சுரேஷ், உத்தர் ராஜ் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர்.
டாஸ்மாக்குகள் மீண்டும் மூடப்பட்டதால் போதைக்காக அங்கு உதிரி பாகங்களுக்கு பெயிண்ட் அடிக்க வைத்திருந்த தின்னர் திரவத்தை இருவரும் குடித்ததாக கூறப்படுகிறது. பணி முடிந்து வீடு வந்த நிலையில் ஒருவர் பின் ஒருவராக வயிற்று வலி ஏற்பட்டு உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.






