ஊரடங்கின் போது எம்எல்ஏ மகனின் குதிரை சவாரி இணையத்தில் வைரல்!
கர்நாடகாவில் ஊரடங்கின் போது பாஜக சட்டமன்ற உறுப்பினரின் மகன் குதிரையில் ஊர் சுற்றிய காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குண்டல்பேட்டை தொகுதி பாஜக எம்எல்ஏ நிரஞ்சன் குமார் மகன் நெடுஞ்சாலையில் முக கவசம் அணியாமல் குதிரை பயணம் சென்றான்.
இதனை சிலர் வீடியோ எடுத்து விட அது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ஊரடங்கும் இருக்கும் நேரத்தில் எம்எல்ஏ மகனின் இந்த செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் பல கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.






