கொரொனா குறித்து சுகாதார அமைச்சக அதிகாரிகள் தினசரி நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக தினசரி அறிக்கை மட்டும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் நிலையில் பொருளாதாரத்தை சீரமைத்து தன்னிறைவை எட்டும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடி அறிவித்துள்ள தன்னிறைவுத் திட்டம், நிவாரண நிதி திட்டம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் நாடு கண்டுள்ள வெற்றி உள்ளிட்டவற்றை முன்னிறுத்தியே இனிமேல் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என கூறப்படுகிறது.
கொரொனாவுக்கான நிதி திட்டத்தை அறிவித்த மோடி அதன் விபரங்களை வெளியிடவில்லை. அவற்றை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் நாட்களில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.