நாடு முழுவதும் மே 19 முதல் விமான சேவை!

நாடு முழுவதும் மீண்டும் உள்நாட்டு விமான சேவையை வரும் 19ஆம் தேதி முதல் தொடங்க ஏர் இந்தியா விமான நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 19 தொடங்கி ஜூன் 2 வரை சிறப்பு விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

பல்வேறு நகரங்களுக்கு சென்று சொந்த ஊர் திரும்ப முடியாமல் ஊரடங்கால் முடங்கியுள்ள பல்லாயிரம் பேர் திரும்பி செல்ல கேரளா உள்ளிட்ட சில மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

சென்னைக்கும் கொச்சிக்கும் இடையே மே 19ஆம் தேதியன்று ஒரு விமானம் இயக்கப்பட உள்ளது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புத காத்திருப்பதாகவும் அது கிடைத்தால் விமானங்களை இயக்க தயார் என்றும் ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply