தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கோவை மாநகராட்சியில் 7500 தூய்மைப்பணியாளர்களுக்கு முழு கவச உடை மற்றும் நலத்திட்ட உதவிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் 7500 பேருக்கு முழு கவச உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து பேசிய அவர் கோவை மாவட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் சார்பாக 8 லட்சம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளதாகவும், தன் சகோதரர் அறக்கட்டளை மூலம் 20 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது எனவும்,உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் பேசினார்.

மேலும்,கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நோய்த்தொற்று இல்லாமல் தவிர்த்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர்,காவல் துறையினர்,சுகாதாரப் பணியாளர்கள் உள்பட அனைத்து துறையினரின் ஒத்துழைப்போடு தான் நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற முடிந்தது. அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் பேசினார்.

 

மேலும்,உலகத்திலேயே உயிரிழப்பு குறைவாக உள்ளது தமிழகத்தில் தான் என்றும், இன்று மட்டும் மொத்தமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் என 20,450 பேருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் ,கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளதாகவும் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி,மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண குமார் ஜடாவத் உள்ளிட்ட அரசு அதிகாரிகள்,எம்.எல்.ஏ – க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஓ.கே.சின்னராஜ், வி.பி.கந்தசாமி, வி.சி.ஆறுக்குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply